தனது கண்முன்னே, வெறும் கையால் துப்புரவு தொழிலாளி ஒருவர் வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ததை கண்டு கொள்ளாத தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ. எபினேசர். திமுக.வை சேர்ந்தவர். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்டையார் நகர் பகுதியில், தெரு ஒன்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால், சேறும் , சகதியுமாக சாக்கடையாக அடைப்பு ஏற்பட்டு கிடப்பதாக மக்கள் புகார் கூறினார். இதனையடுத்து அந்த இடத்திற்கு எபினேசர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு சாக்கடையாக கிடந்ததை பார்த்து கோபமடைந்த எபினேசர், உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் கடுமையாக கடிந்து கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடியாக ஊழியர் ஒருவரை அழைத்து வந்து அந்த சாக்கடையை அள்ள வைத்தனர்.
அவரும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்தார். முழங்கை அளவுக்கு சாக்கடைக்குள் உள்ளே விட்டு கழிவுகளை வெளியே போட்டு அந்த ஊழியர் சுத்தம் செய்தார்.
கழிவுகளை அகற்ற ஒரு கையுறை கூட கொடுக்காமல் அதிகாரிகள் தாங்கள் நல்ல பெயர் எடுக்க அந்த பணியாளரை உபயோகப்படுத்தியதும், அதற்கு மறுப்பு கூட தெரிவிக்காமல் திமுக எம். எல். ஏ எபினேசர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது மக்கள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுக தலைவர்கள் தொடர்ந்து சாதிய வன்முறைகளை கையாள்வதும் சாதி ரீதியாக விமர்சித்து செயல்படுவதும் தொடர்ந்து செய்திகளாக வருவது திமுகவின் போல சமூக நீதியை தோலுரித்துக் காட்டி வருகிறது.