திரையுலக சாதனையாளர்களுக்கு பாஜகவின் தமிழ்த்தாய் விருது !

கடந்த 05.01.23, அன்று சென்னையில், தமிழ் திரை உலகின் ஜாம்பவான்கள் பாக்யராஜ், ரவி கே சந்திரன், யார்
கண்ணன் ஆகியோர் முன்னிலையில், போட்டியில் பங்குபெற்றவர்கள் அவர்களின் சிந்தனைகளை குறும்படமாக
வெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய் விருது வழங்கி தமிழக பாஜகவின் தலைவர்
அண்ணாமலை கௌரவித்தார்.
சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த குறும்படத்திற்கு தமிழ்த் தாய் விருதுகள்
வழங்கப்பட்டது. சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்ட 10 குறும் படங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசாக
வழங்கப்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திரமோயின் நலத்திட்ட உதவிகளை விவரிக்கும் மூன்று குறும் படங்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு
வழங்கப்பட்டது. இந்த விழாவை தலைமை ஏற்று பாஜகவின் கலை கலாச்சார பிரிவு தலைவர் FEFSI சிவா ஏற்பாடு
செய்திருந்தார்.
தமிழ்த் தாய் விருது 2023 விழாவில் புகழ்பெற்ற பாடகி சுசீலா , சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், திரைப்படக்
கலைஞர்கள் வெண்ணிற ஆடை நிர்மலா, ராதா, சச்சு, ராஜஸ்ரீ, கோவை சரளா, கஸ்தூரி சங்கர், கலை இயக்குனர்
தோட்டா தரணி,தொழில்நுட்பக் கலைஞர் ராமலிங்க மேஸ்திரி, பத்திரிகையாளர்கள் மக்கள் குரல் ராம்ஜி, வசீகரன்
ஆகியோர் தமிழ்த்தாய் விருது பெற்றனர் . இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலர்
கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top