நடிகர் ஜோசப் விஜயை கடவுளாக சித்தரித்து அவரை விளம்பரப்படுத்தியுள்ள போஸ்டர் சமூக வலைதளத்தில் பரவிவருவது ஹிந்துக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. விஜய் மக்கள் இயக்கம் வாயிலாக நுழைவுச்சீட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள், பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் போல் விஜயை சித்தரித்து, ‘பேனர்’ அச்சடித்திருந்தனர். அதில், ‘இரண்டு ஆண்டுகளுக்கு பின் காட்சி தரும் கடவுளே’ என குறிப்பிட்டுள்ளனர்.
அந்த பேனருக்கு ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இந்த காட்சி, இணையதளத்தில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்று வருகிறது.
இதுகுறித்து, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம. ரவிக்குமார் விடுத்த அறிக்கையில், ‘விஜய் ரசிகர்களின் இந்த செயல், ஹிந்து கடவுளை இழிவு செய்வதாகும். இயேசுவை போல அவரது உருவத்தை ரசிகர்கள் அச்சிடுவரா? விஜய் ரசிகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கடுமையாக எச்சரித்துள்ளார். சினிமா நடிகர்களுக்குப் பின் சென்று இது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவது திராவிட மாடலில் புதிதல்ல. நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்வது, மிருகத்தை காணிக்கையாக தருவது, இரத்தத்தில் சினிமா நாயகர்களின் படங்களை வரைவது. இப்போது, கடவுளர்களோடு ஒப்பிடும் காலமும் வந்திருப்பது காலக்கொடுமை.