மோடி அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் மேம்படுத்துவதாக உள்ளதே அந்த திட்டங்களின் சிறப்பம்சமாகும். அந்தவகையில், சாலையோரம் சிறிய அளவில் விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளின் நலன் கொண்டு இந்த அரசு முன்னெடுத்த திட்டம்தான் ஸ்வயநிதி.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஸ்வநிதி என்ற பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள சாலையோர வியாபாரிகளிடமிருந்து மிகப் பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் ரூ. 4,606.36 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக 45.32 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா மூலம் சாலையோர வியாபாரிகளும் டிஜிட்டல் முறைகளில் பரிவர்த்தனைகள் செய்யவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் ரூ. 45,000 கோடிக்கும் மேலான மதிப்பில் 37.70 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோர வியாபாரிகள் வங்கிகளை எளிதாக அணுகி கடன் பெறுவதற்கும், வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு தேவையில்லாத வகையில் சிரமங்களை ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.