ஹிந்துக்களின் கலாச்சார மாண்பினைத் திருடி மாற்று மதத்திற்கு ஒப்படைக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றகட்சிகள் பல முயற்சித்து வருகின்றன. அந்தவகையில், ஹிந்து விரோத கட்சிகளும், கிறிஸ்துவ மிஷினரிகளும் சேர்ந்து ஹிந்துக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை அபகரித்து நம் கலாசாரத்தை சீரழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றி வருகிறார்கள்.
திருவள்ளுவர் எல்லா மதத்திற்கும் ஆனவர், பொங்கல் சர்வதேச பண்டிகை தமிழர் திருநாள் என்பதெல்லாம் இவற்றின் ஒரு பகுதியே. ஆனால் கிறிஸ்தவ பாதிரி ஒருவரே பொங்கல் இந்துக்கள் திருநாள் என்று கூறியிருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது இது சம்பந்தமாக பொங்கல் மதச்சார்பற்ற பண்டிகை என்று கூறிவரும் தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுத்துள்ள எழுத்தாளரும், மத்திய அரசின் முன்னாள் செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் கூறியுள்ளதாவது: வேலுார் கிறிஸ்துவ மருத்துவமனையை நிறுவிய ஐடா ஸ்கட்டரின் தாத்தாவான பாதிரியார் ஜான் ஸ்கட்டர், 1849-ல் எழுதிய புத்தகத்தில், ‘ஹிந்துக்களின் திருநாட்கள்’ என்ற பகுதியில், பொங்கலையும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின்
கலாசார, பண்பாட்டு வாழ்வு நெறியை உள்ளடக்கிய ஹிந்து மத பண்டிகைதான் பொங்கல்.
திராவிட இயக்கத்தினருக்கு வேறு திருநாள் கிடைக்காததால், பொங்கலை எடுத்துக் கொண்டு, வழக்கமான புரட்டுகளை செய்து வருகின்றனர். இதனால், பொங்கலின் அடிப்படை மாறி விடாது என அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., ஆதரவாளர்கள், ‘கேரளாவில் ஹிந்து மரபுகள் இருந்தும் ஓணம் பண்டிகைக்கு மதம் கடந்த, தனித்த அடையாளத்தை உருவாக்கி உள்ளனர்.
அதுபோல, தமிழகத்தில் பொங்கலை உருவாக்க வேண்டும்’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
திராவிடம் என்ற நிலப்பரப்பை, இனவாதமாக தி.மு.க. வினர் முன்வைத்தனர். ஆனால், அதை கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலத்தவர்கள் ஏற்கவில்லை. ஒரு இனம் என்றால், அதற்கென தனித்த கலாசாரம், பண்டிகைகள் இருக்க வேண்டும். ஆனால், திராவிடத்திற்கு பண்டிகைகள் இல்லாததால், பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான, ஹிந்து மரபை அழிக்க முயற்சித்து வருகின்றனர். இப்போதும் தி.க.,வினர் ‘திராவிடர் திருநாள்’ என்று கொண்டாடுகின்றனர். ஆனால், தி.மு.க.,வினர் ‘தமிழர் திருநாள்’ என்று கொண்டாடுகின்றனர். இதுவே அவர்களின் வரலாற்று திரிபை அம்பலப்படுத்துகிறது. அரசியலில் மதம் கூடாது என்று மதச்சார்பின்மை பேசுபவர்களே, ஒரு மதத்தின் பண்டிகையை மதச்சார்பற்ற பண்டிகை எனக் கூறி, அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சமத்துவ பொங்கல் என புது உருட்டை திமுக தொடங்கி, ஒரு புறம் இஸ்லாமியர்களை வைத்தும், மறுபுறம் கிறிஸ்துவர்களை வைத்தும் திமுக பொங்கல் கொண்டாடி ஹிந்து விரோதத்தை இன்னும் சம்பாதித்துக்கொள்கிறது. தி.மு.க., என்னதான் முயற்சித்தாலும் பொங்கல் ஹிந்து பண்டிகை தான். அதை யாராலும் மாற்ற முடியாது மண்டூஸ்.