திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்த பட்ஜெட் ஆரம்பிக்கும் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதை எடுத்துக் கூறினார். அந்த வகையில், அந்த 25 வருடத்துக்கான அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். குறிப்பாக உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யவுள்ளது. பட்ஜெட் முடிந்த பின்னர்தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது, தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வரும் என்பது தெரியும். எல்லா வருடங்களையும் போலவே, இந்த வருடமும் மத்திய அரசு தமிழகத்திற்கு குறிப்பாக உள்கட்டமைப்புக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நம்முடைய நம்பிக்கையும் அதுதான். நேற்றைய பொருளாதார புள்ளிவிவர அறிக்கையில் நம்முடைய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளனர்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி:
- நடுத்தர வர்க்க வரவு செலவுத் திட்டம் இடம் பெற்றுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள்
மற்றும் முதியோர்களுக்கு பெரிதும் உதவும். - பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய அறிவிப்புகளைப்
பார்க்கும்போது, பட்ஜெட்டில் பெண்களுக்கு மரியாதை அதிகரித்திருப்பதாக நான் நம்புகிறேன்.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் லைப்ரரி அறிவிப்பையும் நான்
வரவேற்கிறேன் எனதெரிவித்துள்ளார். - மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார்:
- தொழில்நுட்பம், சுகாதாரத் துறை உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியிலும் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது. - 2023-2024 பட்ஜெட்டில் அனைத்துத் துறைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன எனக்
கூறியுள்ளார். - ஹரியானா முதல்வர்: மனோகர் லால் கட்டார்
- சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நிவாரணம் அளிக்கும் பட்ஜெட் இது. புதிய வருமான வரி
விகிதங்கள் தனிநபர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன. - இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66%
உயர்த்தப்பட்டுள்ளது, இதை நான் வரவேற்கிறேன் எனதெரிவித்துள்ளார்.
பா.ஜ., எம்.பி தேஜஸ்வி சூர்யா: - கர்நாடகாவிற்கு சிறப்பு நிதியாக ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். இந்த திட்டம் மாநிலத்தை மாற்றியமைக்கும் என்றார். - வினோத் குப்தா: நிர்வாக இயக்குநர், டாலர் இண்டஸ்ட்ரீஸ்:
மத்திய அரசின் 2023-24-ம் நிதி யாண்டுக்கான பட்ஜெட் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை
முக்கிய இடத்துக்கு உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இதற்கு, ஒட்டுமொத்த டிஜிட்டல்
மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் விரிவாக்கம் பெரும் உதவியாக
இருக்கும்.
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது
வரவேற்கத்தக்கது.
- மூலதனச் செலவு அதிகரிப்பதால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த பட்ஜெட் முன்னுரிமை
வழங்கியுள்ளது: சிஐஐ தலைவர் சஞ்சீவ் பஜாஜ் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்
பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை உருவாக்கும். மூலதனச் செலவுகளை அதிகரிப்பதன்
மூலமாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை
அளிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மிக கவனமாக இந்த பட்ஜெட் சமச்சீரான வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெகுஜன மக்கள் பலனடையும் வகையில் பல முக்கிய
அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூலதன முதலீடுகளுக்கான ஒதுக்கீடு அடுத்த நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.10
லட்சம் கோடியாக உள்ளது.
மத்திய அரசின் மூலதனசெலவினங்கள் ரூ.13.7 லட்சம்கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
பொருளாதாரத்தில் பல நன்மைகளை உருவாக்கும். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை
உருவாக்குவதுடன் தனியார் துறை முதலீடுகளை எளிதாக ஊக்குவிக்கும் என்று சஞ்சீவ் பஜாஜ்
தெரிவித்தார்.
- நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தும் – இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தலைவர் சுப்ரகாந்த் பாண்டா
நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தக்கூடியதாகவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர், “உலகம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், மத்திய அரசு மூலதன செலவினத்தை அதிகரித்திருப்பது முக்கியமான விஷயமாகும். இதனால், பல்வேறு துறைகளிலும் மேம்பாடு நிகழும். தனிநபர்வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதால் மக்களின் நுகர்வு அதிகரிக்கும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றச்சூழல் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உற்பத்தித் துறை போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்களின் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களை வரவேற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.