மத்திய அரசின் பட்ஜெட் தேசத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று லகு உத்யோக் பாரதி மாநிலதுணைத்தலைவர் இரா. கல்யாண் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பட்ஜெட் 2023ல் வருமானவரி விலக்கு ரூ 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இளைஞர்களுக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் பெரும் பலனளிக்கும். பட்ஜெட் CAPEX மூலதன செலவு 33 சதவீதம் உயர்த்தப்பட்டு 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு உற்பத்தி தொழில்கள் வளர்ச்சியடையும். சிறுதொழில்களுக்கான பிணையமில்லா கடன் உத்திரவாத திட்டத்துக்கு மேலும் 2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. விவசாய கடன்களுக்கு 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததன் மூலம் விவசாயம் மற்றும் பம்ப்செட் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் தொழில்கள் பலனடையும். இது தேசத்தின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது” என்றார்.