முஸ்லிம் பெண்கள், விவாகரத்துக்காக குடும்ப நீதிமன்றங்களை மட்டுமே அணுக வேண்டும் என்றும் குலா (விவாகரத்து) விஷயத்தில் ஷரியத் கவுன்சில் போன்ற தனியார் அமைப்புகளை அணுகக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
குலா என்பது முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு வகை விவாகரத்து ஆகும். இது பெண்ணால் விடுக்கப்படும் விவாகரத்து நடைமுறையாகும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஷரியத் கவுன்சில் வழங்கிய குலா சான்றிதழை ரத்து செய்த நீதிபதி சி.சரவணன் தலைமையிலான அமர்வு, பிரிந்த தம்பதியினர், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையம் அல்லது குடும்பநல நீதிமன்றத்தை அணுகி, தங்கள் தகராறைத் தீர்க்குமாறு உத்தரவிட்டது.
இத்தகைய தனியார் அமைப்பு வழங்கிய குலா சான்றிதழ்கள் செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பதார் சயீத் என்பவரது வழக்கில், தனியார் அமைப்புகள் மற்றும் காசிஸ் போன்ற மத அதிகாரிகளுக்கு குலா மூலம் விவாகரத்துக்கான சான்றிதழ்களை வழங்குவதை ரத்து செய்த முந்தைய தீர்ப்பையும் அமர்வு குறிப்பிட்டதுடன் குலா விவாகரத்தை உறுதிப்படுத்திய கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள்காட்டியது.
குடும்ப நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரிவு 7(1)(பி)’படி, முஸ்லிம் விவாகரத்து சட்டம் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்டம் ஆகியவற்றின் கீழ் குடும்ப நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என்றது. முஸ்லிம் பெண்களை ஜமாஅத் கட்டுப்படுத்துவது நீதிக்குப் புறம்பானது, கட்டப் பஞ்சாயத்து எவ்வளவு சட்ட விரோதமோ அவ்வளவு சட்ட விரோதம் ஜமாத் வழங்கும் தீர்ப்புகள். பெண் அடிமை, புரட்சி பற்றி பேசும் போலி சமூக நீதி போராளிகள் இஸ்லாத்தில் உள்ள இந்த பழக்கங்களுக்கு ஆதரவு அளிப்பது என்பதே முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியலுக்கே என்கின்றனர் சட்டத்துறை வல்லுநர்கள்.