முந்நூறு கோடிக்கு பாதுகாப்பு அறை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியும் இன்று வரை அறநிலையதுறை கட்டவில்லை என திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நடந்த உலக சிவனடியார்களுக்கு சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் காவல்துறை ஐ.ஜி
பொன்மாணிக்கவேல் காட்டாமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், சிலைகள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட தமிழக அரசு ரூ. 340 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
ஆனால், ஒரே ஒரு கோயிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில், பாதுகாப்பு அறைகள்இன்னமும் கட்டப்படவில்லை.
கோயில்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நகைகள் உள்ளன.
அதன் விபரங்களை, தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும்.
கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளை, மீண்டும் அந்தந்த கோயில்களிலேயே வைக்கவும் பக்தர்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக தொடர்ந்து ஹிந்து விரோத நடவடிக்கைள் ஈடுபட்டு வரும் திமுக அரசு பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் கடை பிடிக்க வில்லை என்றும், அதன் பின் 24 அடி உயர வேல் சிலையை திமுக அரசு அகற்றியது இந்த சூழலில் இப்படி இருக்க வக்பு வாரியத்தின் சொத்துக்களை பாதுகாக்கவும் மீட்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது. திமுக தொடர் இந்து விரோத செயலில் ஈடுபடத்து வருவதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.