சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 5 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றும் விக்டோரியா கௌரியும் ஒருவர்,தேசிய தெய்விககே கருத்துக்களை சிறந்த முறையில் எடுத்துரைக்கும் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பினர். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உட்பட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தியும் கடிதம் எழுதினர். இந்த நிலையில் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவருடன் பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி என மொத்தம் 5 நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிள் எண்ணிக்கை 57 என உயர்ந்துள்ளது