வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும், சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த நாளில்: பிரதமா் புகழஞ்சலி

சீக்கிய மத குரு ரவிதாஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும். என பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு நேற்று டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினாா்.   

தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ‘குரு ரவிதாஸ் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தும் வேளையில், அவருடைய உன்னத கருத்துகளை நாம் நினைவுகூரவேண்டும். அவருடைய தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, இணக்கமான, வளமான சமூகத்தை உருவாக்க நாம் மீண்டும் உறுதியேற்க வேண்டும். அவரது பாதையைப் பின்பற்றி பல்வேறு முன்முயற்சிகள் மூலமாக ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சென்னை கமலாலயத்தில் நேற்று (05.02.2023) சீக்கிய மதகுரு ரவிதாஸ் அவர்களின் பிறந்த தினம் கொண்டாட பட்டது அது சமயம் அவரது திருஉருவபடத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள்  மலரஞ்சலி செலுத்தினார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top