ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என்னும் புதிய சேவையை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ் அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு மெசேஜ் செய்தால் இருக்கைக்கு உணவு வந்துவிடும்.
முதற்கட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் உள்ள வரவேற்பு பொறுத்து மேலும் விரிவு படுத்தப்படும் என ஐ ஆர் சி டி சி தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இந்திய ரயில்வேயின் பிஎஸ்யூ இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கிய இணையதளமான www.catering.irctc.co.in மேலும் இ-கேட்டரிங் செயலியான food on Track மூலம் இ கேட்டரிங் சேவைகளை தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த இந்த வாடிக்கையாளர்கள் தங்களின்ஆர்டர்களை வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தால் அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும். தற்போது ஐ ஆர் சி டி சி யின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்படுகின்றன.