கன்னியாகுமரி மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் 84 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்து சமய மாநாட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து மாவட்டத்தின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1936-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டை ஹைந்தவ (இந்து) சேவா சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து நடத்தி வந்தன.
இந்த ஆண்டு 86-வது மாநாடு மார்ச் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்து சமய மாநாட்டுக்கு திராவிட மாடல அரசு தடை விதித்தது.
இதனைக் கண்டித்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் 10 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோவாளை சுசீந்திரம் புதுக்கடை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடி மாநாட்டுக்கு அனுமதி வழங்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.
நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எம்.எல் .ஏ எம்.ஆர் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
திராவிட மாடல் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
அறநிலையத்துறை தனது அராஜகங்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடவும் பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.