பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளையும், பெருமைகளையும், தமிழகத்தில் திமுகவின் பொய், புரட்டுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல புதிய பேச்சாளர்களுக்கு பயிற்சி பட்டறை மூலம் பயிற்சி வழங்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.இது சம்மந்தமாக, அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது: “கட்சியின் கொள்கை, பிரதமர் மோடியின் பணியை, தொடர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழக பாஜக, அதிகாரப்பூர்வ பேச்சாளராகும் வாய்ப்பை வழங்குகிறது.
வரும், 2024 லோக்சபா தேர்தல் வரை, பட்டித் தொட்டியெல்லாம் நம் சாதனையை பேச, பயிற்சி பட்டறை வாயிலாக, 120 பேச்சாளர்களை உருவாக்குவதற்காக, கட்சி திட்டமிட்டிருக்கிறது.
கட்சி பேச்சாளராக விரும்புவோர், பிரதமர் மோடி பற்றியும், அவரின் நல்லாட்சியை பற்றியும் இரண்டு நிமிடம் பேசி, அதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்புங்கள்.
தமிழகத்தில், 22 மாதங்களாக, திமுக அரசு, பொய்யையும் புரட்டையும் பேசி திறனற்ற ஆட்சி செய்கிறது. அதை பற்றி, இரு நிமிடங்களுக்கு பேசி, வீடியோ எடுத்து அனுப்புங்கள். நமக்கு தேவை, 120 பேச்சாளர்கள். மேடை தயாராக இருக்கிறது; களம் தயாராக இருக்கிறது.
உங்கள் பெயர், மாவட்டம், தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு, 63801 55600 என்ற எண்ணுக்கு ‘வாட்ஸ் ஆப்’ குறுஞ்செய்தியாகவோ அல்லது, ‘pechupattaraibjptn@gmail.com’ என்ற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ, வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.