தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்தவாறு, திமுகவின் ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. இது ஏற்கனவே திமுகவினர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்று Dmk files என்ற பெயரில் அதற்கான முன்னோட்ட காட்சிகளை தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்த வீடியோவில் கருணாநிதி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, ஸ்டாலின் மகள் செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க முத்து, மு.க அழகிரி, தயாநிதி அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம் திமுக குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து விவரங்களும் நாளை வெளிவரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, இந்நிலையில் #Dmkfiles என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
பல்வேறு தரப்பினரும் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து, திமுகவுக்கு எதிரான தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். மேலும் உடன்பிறப்புகளை கிண்டல் செய்து மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.