கர்நாடகாவில் தலைவர் அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இனத்தை, மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் #திராவிடமாடல் கட்சியினர் உடனடியாக அதற்கு கண்டனம் தெரிவித்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களை பற்றி எவ்வாறு கவலைப்படுவார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
கனிமொழியின் இந்த கேள்விக்கு பதிலடி தந்துள்ள தலைவர் அண்ணாமலை, அடித்து கொண்டு உருள அதுஒன்றும் திமுக மேடையில்லை என சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நமது தேசியக் கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் திமுகவினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம் என பதிவிட்டுள்ளார். மேலும் மாநில மொழியின் வாழ்த்து பாடலை பாடிய பிறகு தான் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பதையே ஈஸ்வரப்பா சுட்டிக் காட்டியதாகவும் தெரிவித்தார்.