கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள நேத்ரா ஜோதி பாராமெடிக்கல் கல்லூரியில், இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ட்வீட் செய்த பாஜக பிரமுகர் சகுந்தலாவை, காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது.
உடுப்பியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்து வரும் முஸ்லீம் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் குளியலறையில் ரகசியமாக கேமரா வைத்து இந்து மாணவிகள் குளிப்பதை படம் பிடித்து அதனை சக முஸ்லிம் ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து வந்ததாக அக்கல்லூரியில் படிக்கும் சக மாணவிகள் குற்றம்சாட்டியிருப்பது அம்மாநிலத்தில் உள்ள இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி புகார் அளித்த பின்னர் கல்லூரி நிர்வாகம் முஸ்லீம் மாணவிகளை இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இதற்கு துணை போனவர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று இந்து மாணவிகளின் உறவினர்கள் மற்றும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். இதனால் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு முஸ்லீம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ஆனால் இந்து மாணவிகளின் குளியலறை வீடியோ எடுக்கப்பட்டு அதை முஸ்லீம் மாணவிகள் வெளியில் உள்ள சக ஆண் நண்பர்களுக்கு அனுப்பி, இவ்வளவு பெரிய அநீதி நடந்துள்ளதற்கு முதலமைச்சர் சித்தராமையா மவுனம் காத்து வருகிறார்.
இது பற்றி உடுப்பி கல்லூரி மாணவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக, இந்து மாணவிகளின் குளியலறை வீடியோ எடுத்து வந்துள்ளனர். அதனை ஆண் முஸ்லீம் நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வந்தாக அதிர்ச்சியான தகவலையும் கூறினர்.
மேலும் ஆண் நண்பர்கள் கொடுத்த செல்போன் மூலமாக வீடியோ எடுத்து அதனை கல்லூரி வெளியில் காரில் காத்திருந்தவர்களுக்கு முஸ்லீம் மாணவிகள் பகிர்ந்துள்ளனர். இதனை அவர்கள் யார், யாருக்கு அனுப்பினார்கள் என்பது தெரியாது என்றனர். இந்த சம்பவம் மதியம் நேரங்களில் தினந்தோறும் நடந்துள்ளது. இது பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜூலை 18ம் தேதி மீண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் பின்னரே தகவல் வெளியே பரவ ஆரம்பித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று மாணவர்கள் கூறினர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக குற்றத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் அதற்கு துணை போன ஆண் நண்பர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோஷங்கள் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘‘உடுப்பி வழக்கை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது’ எனக்கு கூறியது. அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த கர்நாடக பாஜக பெண் பிரமுகர் சகுந்தலா, ‘‘சித்தராமையாவின் மருமகள் அல்லது அவரது மனைவிக்கு இது நடந்தால்… அப்போதும் இதையே சொல்றீங்களா?’’ என்ப் பதிவிட்டிருந்தார்.
இதற்காக கர்நாடகா முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாரை அவமதித்து ட்வீட் செய்துவிட்டார், என பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பாஜக பிரமுகர் சகுந்தலாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைதுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யாமல் ஆதரவாக குரல் கொடுப்பவர்களை கைது செய்வதுதான் காங்கிரஸ் ஆட்சியின் லட்சனம் என்று சமூக வலைதளங்களில் கண்டனக்குரல் எழுந்து வருகிறது.
-வ.தங்கவேல்