விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலை திமுக அரசு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (ஜூலை 31) தேசிய பிற்படத்தப்பட்டோர் ஆணையம் இன்று (ஜூலை 31) சென்னையில் விசாரணை நடத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.
விசாரணையின் போது,
“அது தனியார் இடத்தில் இருக்கிற தனியார் கோவில் தானே ?!
“இரண்டு மாதங்களாக மூடி இருப்பது ஏன் ? .
“விசாரணைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஏன் வரவில்லை
? அடுத்தமுறை விசாரணையின் போது ஆட்சியர் வர வேண்டும்..
“அது ஒரு குறிப்பிட்ட OBC சமுகத்தின் குலதெய்வம். இதை கருத்தில்கொண்டு நியாயமான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
என்று ஆணையம் கூறியுள்ளதாக அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
முன்னதாக
மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், அந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தினரிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் கங்காராமை தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர் சமூதாய மக்களுக்கு சொத்தாக இருக்கும் தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் தற்போது திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அபகரிப்பு முயற்சியின் கீழ் இருக்கிறது. ஒன்றரை மாத காலத்திற்கும் மேலாக பூட்டியுள்ள கோவிலை திறக்கவும், மேல்பாதி கிராமத்தின் வன்னியர் சமூக மக்களுக்கு அந்தக் கோயிலின் மீதான உரிமையை வழங்க வலியுறுத்தியும் ஆணையத்திடம் மனு அளித்தோம்.
தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குலதெய்வ கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்கான அரசியலமைப்பு அதிகாரம் என்பது பிரதமர் நரேந்திர மோடி அரசால், சட்டத் திருத்தம் 112 மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வழிகாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சமுதாயங்களுக்கான கோவில்களை அரசு அபகரித்துக் கொள்ள, அது ஒன்றும் அரசின் சொத்து கிடையாது. ஆனால், வெளிப்படையாகவே இந்தக் கோவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்.
இந்து மக்களின் சொத்துக்களை தங்களது சொத்தாக நினைப்பதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். எனவே, மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விரைந்து தலையிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவரிடம் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தியுள்ளோம். வருகின்ற ஜூலை 31ம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஆணையத்தின் தலைவர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
அதன் படி இன்று நடத்தப்பட்ட விசாரணை நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அவர்கள் தகவல் பகிர்ந்துள்ளார்.