சனாதனம் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிய கடிதத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆளுநரிடம் அளித்த புகார் மனு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரியும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.