தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு வைரஸ் உறுதியான நிலையில், சென்னையில் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் பொதுமக்களின் மீது கவனம் செலுத்துவதில்லை. தங்களது குடும்பம் கல்லா கட்டினால் போதும் என்று நினைக்கிறது. இதனால் மாநகராட்சி முதல் கிராம ஊராட்சி வரை சுகாதாரச் சீர்கேடு பரவியுள்ளது. குறிப்பாக சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகிகப்படுகிறது. சென்னை போன்ற மாநகராட்சிகளில் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் குடிநீரை பெரிய அளவிலான டிரம்களில் பிடித்து வைத்து அதனை வாரக்கணக்கில் உபயோகிக்கின்றனர்.
இது போன்ற நீரை பருகும் மக்களுக்கு பல்வேறு வியாதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி டெங்கு நோய் பரப்பும் கொசுக்களும் நகரங்களில் பெருகி வருகின்றன. பல இடங்களில் சாக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. அடைப்புகள் நீக்கப் படவில்லை. இதன் காரணமாகவே தற்போது டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த இரு மாதத்தில் 535 பேருக்கு டெங்கு வைரஸ் உறுதியானதும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. சுகாதாரத்துறையை கவனிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன் சுகவீனப்பட்டு இருக்கிறார். டெங்கு நோய் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதியோ டெங்குவை ஒழிக்காமல் ” டெங்கு போன்ற சனாதனத்தை ” ஒழிக்கப் புறப்பட்டு விட்டார். அது மட்டுமல்லாமல் எக்ஸ் தளத்தில் கொசு வத்திச் சுருள் படத்தை பதிவிட்டு விளையாடி வருகிறார். இது போன்றவர்களின் கைகளில் சிக்கியுள்ள தமிழக மக்கள் இவர்கள் சீக்கிரம் ஒழிய வேண்டும் என்று களம் இறங்கத் தயாராகி வருகின்றனர்.