‘ஆவின் நெய், வெண்ணெய்’ விலை ரூ.70 உயர்த்தி ரூ.700க்கு விற்கும் திமுக அரசு!

ஆவின் நெய் ஒரு கிலோ 70 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது திமுக அரசு. கடந்த ஒரு வருடத்தில் ஆவின் நெய் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டு லிட்டர் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனுடன் சேர்ந்து வெண்ணெய் விலையும் உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு நிறுவனமான ஆவின் பொருட்களை நம்பி பல லட்சம் நடுத்தர மக்கள் உள்ளனர். ஆனால் சமீபகாலமாக திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஒரு லிட்டர் நெய் ரூ.580ல் இருந்து, ரூ.630 ஆக உயர்ந்துள்ளது. 5 லிட்டர் நெய், 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆவின் நெய் 200 மி.லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2வது முறையாக ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.265 ரூபாயில் இருந்து 280ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால், வெண்ணெய், நெய் என அடுத்தடுத்த விலை உயர்வால் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய சுமையை திமுக அரசு சுமத்தியுள்ளது.

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனங்களில் இனிப்பு வகைகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகளவில் உண்டு. இதனால் ஏராளமானோர்கள் ஆவின் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது. தற்போது ஒரே அடியாக திமுக அரசு விலையை பல மடங்கு உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்று தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் திமுக அரசு விலையை உயர்த்தி வருவதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுகவை சார்ந்தவர்கள் சம்பாதிப்பதற்காக இது போன்ற விலையேற்றத்தை பொதுமக்கள் மத்தியில் திணிப்பது தொடர்கதையாக உள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஆட்சியில் இருக்கும் கொஞ்ச காலத்தில் எப்படியாவது ஆவின் நிறுவனத்தை மூடி விட வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்கிறது திறனற்ற திராவிட மாடல் அரசு.

500 மி.லி நெய் விலையை 310ல் இருந்து 360ஆக உயர்த்தியுள்ளது. பால் கொள்முதல் விலை உயர்த்தபடாத பொழுது என்ன காரணத்தால் விற்பனை விலை 16% உயர்த்தபட்டுள்ளது? இதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் என்ன பதில் சொல்லுவார் ?  என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top