புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் இந்த அறிவிப்பினை பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் நியமனத்தில் செல்வகணபதி தற்போது ராஜ்ய சபா எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரியர் பணியாளருமான இவர், தனியார் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே செல்வகணபதி புதுச்சேரி மாநில பா.ஜ.,வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியை மேலும் பலப்படுத்துவார் எனத் தொண்டர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.