ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை, ஸ்ரீ ராமர் பயணித்த 290 இடங்களில் ஸ்ரீராமர் தூண்கள் நிறுவப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளரும், கரசேவக்புரத்தில் உள்ள அசோக் சிங்கால் அறக்கட்டளையின் உறுப்பினருமான சம்பத் ராய் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு பெருமை சேர்க்க இந்து அமைப்புகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. கர்சேவக்புரத்தில் உள்ள அசோக் சிங்கால் அறக்கட்டளையின் கூற்றுப்படி, ஶ்ரீ ராமர் பயணித்த வழித்தடத்தில் 290 ‘ஸ்ரீ ராம் தூண்கள்’ கட்டப்படும்.
இந்த தூண்களை கட்டுவதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை. அறக்கட்டளை அதன் முழுச் செலவையும் ஏற்கும் என்று ராய் தெரிவித்துள்ளார்.