‘இந்தி மொழியில் எழுத ஆட்கள் தேவை’ என திமுக ஐடி அணி விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி படிக்க வேணா, இந்தி வேணா போடா என்ற வசனத்துடன் சுற்றிக்கொண்டிருந்த திமுக தற்போது இந்தி தெரிந்தவர்கள் யாராக இருந்தால் வாங்க எங்களுக்கு தேவை என்று விளம்பரம் செய்து வருகிறது.
இது சம்பந்தமாக திமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்களில், ‘உபிகளே விரைந்திடுங்கள்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுத, ‘கன்டென்ட் ரைட்டர்’ மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தேவை என்றும், இதற்காக அக்.15க்குள் விண்ணப்பிக்குமாறும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உபிகள் கட்டாயம் உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திமுகவின் வண்டவாளங்கள், சனாதன எதிர்ப்புப் பேச்சுகள், இந்து மத வெறுப்பு பேச்சுக்கள், வடக்கன்ஸ், பான்பராக் கோணவாயன், முட்டாப் பசங்க, படிக்காம வேலைக்கு வரும் கூலி பசங்க என்று திமுக தலைவர்கள் பேச்சுக்களின் காணொளிகள் ஆகியவை உடனுக்குடன் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களால் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் இண்டி கூட்டணியில் மோதல்கள் உருவாகி இருக்கிறது. எதிர்பாராத இந்த சம்பவங்களால் நிலை குலைந்து போன திமுக, இப்போது இந்தி ஆட்களை தேட துவங்கியிருக்கிறது.
திமுகவின் இந்த விளம்பரத்திற்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள், இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்துடன், ‘டீ ஷர்ட்’ அணிந்தவர்கள், இப்போது, இந்தியில் எழுத ஆட்களை தேடுவது எதற்காக என்று, பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
என்னதான் இந்தியில் விளம்பரம் கொடுத்தாலும், இவர்கள் பேசிய பேச்சுக்களின் காணொளிகளை மறைக்கவா முடியும்!