வந்தே பாரத் அதிநவீன சொகுசு ரயில் உள்கட்டமைப்பு புகைபடங்களை மத்திய ரயில்வே அமைச்சர் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மிக வேகமாக செல்லக்கூடிய வகையிலும் மற்ற பெருநகரங்களை இணைக்கும் வகையிலும் புதிதாக வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தற்போது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால் நாற்காழியில் அமர்ந்து செல்லும் விதமாகவே வந்தே பாரத் ரயில் சேவை இருக்கிறது, படுக்கை வசதிகளுடன் கூடிய சேவை எப்போது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில், அதிநவீன வந்தே பாரத் சொகுசு ரயிலின் உள்கட்டமைப்பு படங்களை பதிவேற்றி உள்ளார். குளிரூட்டப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் சொகுசு ரயில் 2024-ம் ஆண்டு பயணிகளின் பயன்பாட்டிரும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய படுக்கை வசதியால் வந்தே பாரத் ரயிலுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது.