சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் இன்று காலை (அக்டோபர் 5) விடியா அரசு போலீசாரை வைத்து கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களை இந்த அரசு கண்டுக்கொள்ளாமல் இருந்தது.
இதற்கிடையே ஆசிரியர்களின் போராட்டம் இணையம் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வந்ததால், வேறு வழியின்றி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அமைச்சர் மீது நம்பிக்கை இல்லாததால் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை (அக்டோபர் 5) போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை உட்பட அனைவரையும் குண்டுக்கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களின் குழந்தைகள் பலர் அழுதே கொண்டே இருந்தனர். சாப்பிடாமல் கூட அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த எங்களை எதற்காக இந்த அரசு கைது செய்கிறது என கேள்வி எழுப்பிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலில் தங்களுக்கு பாடுபட்ட ஆசிரியர்களையே வஞ்சிக்கும் விடியா இனி யாரைத்தான் வஞ்சிக்காது என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்..