சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் திமுக எம்.பி., 2ஜி ராசாவின் பினாமி நிறுவனத்தின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
இது பற்றி அமலாக்கத்துறை இன்று ( 10.09.2023 ) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துகள், அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டப்படி இந்த சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பினாமி பெயரில் பல கோடி ரூபாய் அளவில் நிலம், தொழிற்சாலை என வைத்து ராஜயோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தால் மட்டுமே கொள்ளைக்கார ஆட்சியில் இருந்து மக்களை மீட்க முடியும் என்கிறார்கள் பாமர மக்கள்…