ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஒட்டு மொத்த இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது திடீரென்று ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை 5,000க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின் போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள், வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக காஸாவுக்கு பிடித்துச் சென்றனர்.
பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறுவர் சிறுமியர் ஆண்கள் பெரியவர்கள் பலர் கொடுமையான முறையில் கொல்லப் பட்டனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த உலகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், மேற்கு உலக நாடுகள் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த சமயத்தில் இஸ்ரேல் பக்கம் நிற்பதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று (அக்டோபர் 10) காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்துகின்ற வகையில் பாலஸ்தீனம் பக்கம் இருப்பதாகவும், இதற்கு காங்கிரஸ் ஆதரவாக இருப்பதாகவும் அந்தத் தீர்மானம் தெரிவித்தது.
இந்தத் தீர்மானத்திற்கு இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பக்கம் நிற்கும் போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏன் இப்படி பயங்கரவாதிகள் பின்னாடி இருக்கின்றது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இது போன்றவர்கள் கையில் இந்திய நாட்டை எப்படி ஒப்படைப்பது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஒரு வேளை தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை பயங்கரவாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட மாட்டார்களா எனவும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.