ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு தற்போதைய நிலைமை பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு அழைப்பு விடுத்ததாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில்,
“பிரதமர் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்பில், தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்தற்கு நன்றி. இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறார்கள். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அன்றே பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் குறித்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான தருணத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.