இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென ராக்கெட் ஏவுகனை மூலம் தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இஸ்ரேல் முழுமையான போரில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. போரானது எங்கள் மீது கொடூர மற்றும் வன்முறையான வழியில் திணிக்கப்பட்டு உள்ளது. இந்த போரை இஸ்ரேல் தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என ஹமாஸ்க்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசினார். ஹமாஸ் பயங்கரவாதிகள் மநடத்திய தாக்குதலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 2,300 இஸ்ரேல் மக்கள் காயமடைந்து உள்ளனர்.
இதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் தக்க விலை கொடுப்பார்கள் என்றும் அதனை நீண்ட காலத்திற்கு அவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்றும் நேதன்யாகு எச்சரிக்கை செய்துள்ளார்.