மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – ஜி.கே. நாகராஜன் 

நேற்று முன்தினம் (அக்டோபர் 9) டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்வது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

அதில் பேசிய அமித்ஷா அவர்கள் வறுமையின் விளிம்பிலுள்ள கைவினைக்கலைஞர்களை ஊக்குவிக்க பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இத்திட்டம் முறையாக செயல்படுத்துவதன் மூலம் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அதற்கான முயற்சியை தீவிரமாக செயல்படுதவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அந்நிகழ்வில் தமிழக பொறுப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜன்  பேசியதாவது:

தமிழகத்தில் 48 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டம், ஆயுள் காப்பீடு, முத்ரா வங்கி உள்ளிட்ட திட்டங்களால் மூன்று கோடிக்கு மேல் அதிகமான மக்கள் பயன் பெற்றுள்ளார்கள். ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு விவசாயக்கருவிகள், கடன் அட்டை, காப்பீடு ஆகியவற்றில் திமுக தனது பெயரை ஒட்டியும், நெல்கொள்முதலில் குறிப்பிட்ட திமுக கட்சியினர் முறைகேடு செய்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எனவே தமிழகத்தை பொறுத்தவரை மக்களே நேரடியாக கணினி மூலமாக  தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். மேலும் ஒரு குழு அமைத்து இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக சார்பாக கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட கோமாதாவை நினைவுப் பரிசாக மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவிற்கு  வழங்கினார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top