பதான்கோட் தாக்குதல் முதன்மை குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

கடந்த 2016ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலில் முதன்மை குற்றவாளியாக செயல்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய நிர்வாகியான பாகிஸ்தானைச் சேர்ந்த அலி காசிஃப் ஜேன் என்ற பயங்கரவாதி பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் ஆவார்.

தற்போது பாகிஸ்தானின் செயில்கோட் பகுதியில் உள்ள ஒரு மசூதியில், அடையாளம் தெரியாத நபரால் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், லதீஃபை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளூர் வழிகள் அனைத்தையும் தெரிந்தவர்களாகவும் இருந்ததாகவும் இதன் மூலம் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள்தான் அவரை சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதன் உண்மைத் தன்மையை சிலர் சந்தேகப்படுகின்றனர். காரணம், சுட்டவர்கள் வெளிநாட்டினர் என்று சொன்னால்  தங்களுக்கு கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடும் எனவும் பாகிஸ்தான் அரசு  கருதலாம் என்பது அவர்கள் தரப்பு எண்ணம்.

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் வேறு வேறு நாடுகளில் மர்மமான முறையில்  சுட்டுக் கொல்லப்பட்டு வருவது சர்வ தேச அளவில் இந்தியா மீது ஒரு இனம் புரியாத மரியாதையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top