உத்தரகண்ட் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிதோரகார் என்ற இடத்தில் உள்ள பார்வதி குந்த்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். இந்த புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில்: உத்தரகண்டில் உள்ள பித்தோராகரின் புனித பார்வதி குந்த்தில் தரிசனம் செய்து வழிபாடு செய்தேன். இங்கிருந்த ஆதிகைலாச தரிசனத்தால் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இயற்கையின் மடியில் அமைந்துள்ள ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தின் இந்த இடத்தில் இருந்து, நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.