கோவிலுக்கு சென்ற பட்டியல் சமூகத்தினரை இழிவாக பேசியவருக்கு திமுகவில் மீண்டும் ஒன்றியச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் போலி சமூக நீதி இவ்வளவுதான் என நெட்டிசன்கள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையை, திருமலைகிரி ஊராட்சி தலைவரும், சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலராகவும் இருந்த மாணிக்கம் மிரட்டினார். அப்போது உங்களை எல்லாம் யாரு கோவில் உள்ளே விட்டது என மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்தது.
இந்த சம்பவம் அங்குள்ள யாரோ ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதைப் பார்த்த செட்டிசங்கள் திமுகவின் சமூக நீதி இவ்வளவுதான் என நெட்டிசன்கள் அப்போது மிகக்கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டது.
வேறு வழியின்றி வழக்கம்போல கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், மாணிக்கம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்தார். இதன் பின்னர் சேலம் உருக்காலை போலீசாரால் மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஒன்பது மாதங்கள் கழித்து மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கம் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டாராம் அதனால் மீண்டும் பதவி வழங்கப்படுவதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
திமுகவில் உள்ளவர்கள் பட்டியல் சமூகத்தினரை எவ்வளவு வேண்டுமானாலும் அவமானப்படுத்தலாம், அவர்களின் சாதியை சொல்லி திட்டலாம். அதே வழியில் நாங்கள்தான் பட்டியல் சமூகத்தினரின் பாதுகாவலர்கள் என்று தம்பட்டமும் அடித்துக் கொள்ளலாம். இப்படி ரெட்டை வேஷம் போட்டு சமூக நீதி பேசும் திமுகவை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள் என்பது சிறப்பு!