‘என் மண் என் மக்கள்’ 3ம் கட்ட நடைப்பயணம் இன்று (அக்டோபர் 16) அவிநாசியில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளி, வணிகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் கோவைக்கு வருகை புரிந்தார். அவரை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார்.
நடை பயணத்திற்கு அவினாசி வந்த அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையிலும்
நடைபயணம் வெற்றிகரமாக நடை பெற்றது. தலைவர்கள் நனைந்தபடியே மக்களை சந்தித்தனர் . மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் என் மண் என் மக்கள் பெயரிட்ட ஆடையை அணிந்தபடி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.