சனாதனம் பற்றி பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் பம்மிய உதயநிதி!

சனாதனத்தை ஒழிப்பேன் என பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அதே போன்று திமுக எம்.பி., 2ஜி ராசாவும் பேசியிருந்தார். இந்தக் கூட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். இவர்களின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.

இதற்கிடையே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மூவரும் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கின்றனர் என்பதை விளக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று (அக்டோபர் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது உதயநிதி தரப்பிலும், சட்டப்பேரவைச் செயலர் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி தரப்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதில் இருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்பது தெளிவாகிறது. உதயநிதி தனிப்பட்ட முறையில்தான் இந்த கருத்தை தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை.  அரசியலமைப்பு சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அன்றையதினம் அந்த நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ், அதில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உதயநிதி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளியே பேசும்போது அமைச்சராக என்ன வேண்டும் என்றாலும் பேசிவிடுவது. நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு அமைச்சராக கருத்து கூறவில்லை. தனிப்பட்ட முறையில்தான் கருத்து தெரிவிப்பதாக கூறுவது, உதயநிதியின் முரண்பட்ட இந்த செயல்பாட்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top