ஈரோடு மாவட்டம், சென்னிமலை மலை முருகன் கோயில் பற்றி அவதூரான வகையில் பேசியது தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஹிந்து கடவுள்கள் பற்றி ஜான் பீட்டர் என்பவர் அவதூறான வகையில் பேசி வந்தார். இதனால் அங்குள்ள ஹிந்துக்கள் அவரை கண்டித்தனர்..இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிறிஸ்தவர்களின் தரப்பு புகாரை ஏற்று இந்துக்களை கைது செய்தது இந்து விரோத திமுக அரசு.
இதனையடுத்து பாஜக மற்றும் ஹிந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் கடந்த 13-ம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பங்கேற்றனர்.
ஹிந்துக்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை கண்டு அஞ்சிய அரசு நிர்வாகம் தற்போது கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்ற சரவணன், திருப்பூர் மதபோதகர் ஸ்டீபன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இதில் ஜோசப் என்ற சரவணனை சென்னையில் போலீசார் கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் ஸ்டீபனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹிந்துக்களின் போராட்டத்திற்கு பின்னர்தான் மதபோதகர் கைது செய்யப்படுகிறார். ஒரு வேளை போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்த விடியாத அரசு ஒரு மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக செயல்பட்டிருக்கும் என ஹிந்து முன்னணியினர் கூறுகின்றனர்.