இது இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம். துறைமுகங்கள், கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான நேற்று (அக்டோபர் 19) உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த 9 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களை மேம்படுத்த மகத்தான முயற்சிகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக சரக்குக் கையாளும் திறன் மேம்பட்டு உள்ளதால் சரக்கு அளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இது இந்திய துறைமுகங்களின் திருப்புமுனை நேரம். துறைமுகங்கள் கணிசமாக மேம்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளை விட சிறப்பாக இருக்கிறது” என்றார்.