கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து இன்று (அக்டோபர் 20) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
கோவை மாநகராட்சியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2022 – 2023 ஆண்டுக்கான தினக்கூலியாக ரூ.721 நிர்ணயித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆயினும் புதிய ஊதியம் இன்றுவரையில் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்தின் தொழிலாளர் துறையுடன், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட பல தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இதையடுத்து தங்களுக்கு ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்டோபர் 20) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். இதனால், கோவை மாநகர் பகுதியில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா இதனை எல்லாம் கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் நகரில் பல பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த விடியாத அரசு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் கோவை நகர பொது மக்கள்.