திமுகவை பொறுத்தவரை நீட்டுக்கு எதிராக நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்வை தமிழகத்தில் எல்லாரும் ஏற்று கொண்டார்கள். 8 ஆண்டு தரவுகளை எடுத்து பார்த்தால் நீட் பின் தங்கிய மற்றும் சாமானிய மக்களுக்கு சாதகமாக தான் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆளுநரை திமுகவினர் தரக்குறைவாக விமர்சிக்க கூடாது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தில் என்ன தவறு இருக்கிறது?. ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி.ஆர்.பாலு நிறுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை ஒவ்வொரு ஜாதி கட்சியும் வைத்துள்ளன. எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன?
ஆளுநர் தன்னுடைய வேலையை செய்கிறார். திமுகவினர் வரம்பு மீறி கருத்துகளை தெரிவிக்கின்றனர். திமுக அரசிடம் சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியல் கேட்கும் போது 40 பேர் கொண்ட பட்டியலை மட்டும் கொடுத்தனர். ஆனால் ஆளுநர் நான் 6 ஆயிரம் பேரை கண்டுபிடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
டி.ஆர்.பாலு குடும்ப அரசியலில் தனது மகனை அமைச்சராக்கி வைத்துள்ளார். அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது.
நீட்டை எதிர்ப்பதனால் இவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். நீட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் துவங்கி என்ன நடக்க போகிறது? ஆளும் கட்சியால் 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாதா? திமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர்! 50 லட்சம் கையெழுத்து வாங்க முடியாவிட்டால், திமுக கட்சியை இழுத்து மூடிவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்.
திமுகவை பொறுத்தவரையில் நீட்டுக்கு எதிராக நாடகம் நடத்துகிறார்கள். நீட் தேர்வை தமிழகத்தில் அனைவருமே ஏற்று கொண்டார்கள். 8 ஆண்டு தரவுகளை எடுத்துப் பார்த்தால் நீட் பின் தங்கிய மற்றும் சாமானிய மக்களுக்கு சாதகமாக தான் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தமிழகத்தில் திமுக கட்சியினர்தான் அதிகளவு மருத்துவக்கல்லூரி வைத்துள்ளனர். நீட் தேர்வு வந்த பின்னர் தங்கள் கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய ஆண்டுக்கும் 1000, 2000 கோடி பணம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற கவலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பொய் பிரச்சாரத்தை செய்து போராட்டம் நடத்த தூண்டி விடுகின்றனர். ஆனால் இவர்களின் பொய் புரட்டை இப்போது மக்கள் நம்புவதில்லை. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர் என்பது அனைவர்க்கும் புரிந்து விட்டது. இந்த விஷயத்தில் இனி திமுக வின் நாடகம் எடுபடாது என்கிறார்கள் பொது மக்கள்.