திருக்கோவிலா? இல்லை திமுக அலுவலகமா? எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை வரவேற்று பேனர்!

திருநெல்வேலி ஜங்ஷன் அருள்மிகு கண்ணம்மன் கோவில் வாயில் கதவு மீது திமுக எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை வரவேற்று அக்கட்சியினர் பேனர் கட்டியிருந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜங்ஷன் அருள்மிகு கண்ணம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், இக்கோவில் நுழைவு வாயில் முன்பு திமுகவினர் எம்.எல்.ஏ., அப்துல்வகாப்பை மற்றும் அக்கட்சியினரை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட நெல்லை மாநகர இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் அத்துமீறும் திமுக. நெல்லை ஜங்ஷன் அருள்மிகு கண்ணம்மன் கோவில் வாயில் கதவு மீது அப்துல் வகாப்பை வரவேற்று திமுக பேனர்.
திருக்கோவிலா? திமுக அலுவலகமா? செயல் அலுவலர் உறங்குகிறாரா? கோவில் நிர்வாகம் உடனடியாக பேனரை அகற்றி அத்துமீறி கோவிலில் கட்டிய நபர்கள் மீது புகார் கொடுத்து  காவல்துறை மூலம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த கோவில் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதனை தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களிலேயே திமுகவினர் கட்டிய பேனர் அகற்றப்பட்டுள்ளது. திமுகவினர் தொடர்ந்து இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்ற மதத்தினர் வாயிலில் இது போன்று திமுகவினர் வரவேற்று பேனர் கட்ட முடியுமா? ஏன் இந்துக்கோவில்களில் மட்டும் தங்களின் வன்மத்தை காட்டுகின்றனர். இந்துக்கள் விழிப்புடன் இருந்தால் தான் இதுபோன்று அநீதிகளை தடுக்க முடியும், என்கிற நெல்லை வட்டார அன்பர் ஒருவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top