வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியில் கன்னி கோவில் அமைத்து வழிபாடு நடத்திய பொதுமக்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விடியாத ஆட்சியின் வனத்துறையை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் மூலக்காங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள மக்கள் வனப்பகுதி அருகே கன்னி கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் விஜயகுமார், வெங்கடேசன், குமார் ஆகிய மூன்று பேர் மீது அனுமதி இல்லாமல் கோவில் கட்டியதாகவும், மரம் வெட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் காட்டூத்தீ போன்று அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இது பற்றி இந்து அமைப்பினருக்கு தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கன்னி கோவிலை இடித்துவிட்டு, ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய், அபராதம் கட்ட வேண்டும், அப்படிக் கட்டினால் மட்டுமே அவர்களை விடுதலை செய்ய முடியும் என வனத்துறையினர் நிபந்தனை விதித்திருந்தனர்.
இதனால், ஆவேசம் அடைந்த பொது மக்கள், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து வனத்துறையினரைக் கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பொதுமக்களின் எதிர்ப்பை கண்டு அஞ்சி, கட்டப்பட்ட கோவிலை இடிக்க மாட்டோம் என்றும், கைது செய்யப்பட்ட விஜயகுமாரை வனத்துறை விடுதலை செய்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
இந்துக்கள் கட்டுகின்ற கோவில்களை இடிப்பது மற்றும் பூஜை செய்யும்போது தடை செய்வது உள்ளிட்ட கொள்கைகளை விடியாத அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டால் விடியாத ஆட்சியின் அராஜகத்தை முறியடிக்கலாம் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.