அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத போலீசாருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்டோபர் 22, 29ம் தேதிகளில், 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி மாவட்ட அமைப்புகள் அளித்த மனுக்களை போலீசார் நிராகரித்தனர்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நிபந்தனை அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவின்படி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் உள்துறை முதன்மை செயலர், டி.ஜி.பி., மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு என தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்காததால் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரபுமனோகர் ஆஜராகி நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி வழங்காததால் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவம்பர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து வாதங்களை கேட்ட நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது திமுக அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுகிறது. தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். எவ்வளவு அவமான பட்டாலும் இந்த விடியாத திமுக அரசு திருந்தின பாடில்லை.