17 லட்சம் ஆப்கானிஸ்தான் மக்களை துப்பாக்கி முனையில் வெளியேற்றும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் மக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானில் உள்ள பல லட்சம் பேர் அண்டை நாடான பாகிஸ்தானில் அகதிகமாக குடியேறினர். இதுவரையில் சுமார் 17 லட்சம் பேர் குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் 13 லட்சம் மக்கள் அகதிகளாகப் பதிவு செய்துள்ளனர். 8.8 லட்சம் பேர் விசா மற்றும் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். 17 லட்சம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். அதன்படி சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

எனவே, சட்டவிரோதமாக உள்ள அனைவரும் வரும் நம்பர் 1-ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனப் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என்றும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி வெளியேறுவோம் என்றும், பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியாலும், பொது மக்களுக்கு உணவு கிடைப்பது அரிதாகிவிட்டதாலும் அரசு இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பாகிஸ்தானின் மனிதயநேயமற்ற செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top