‘‘கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை விடியாத திமுக அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?’’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநில அரசை நோக்கி சரவெடியாக கேள்வி எழுப்பி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் தேரோட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, ‛‛கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?
பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் பல பிரிவினர் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை என்ற சூழல் வருத்தத்திற்குரியது. நவம்பர் 17 ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என மாநில அரசுக்கு கடுமையாக உத்தரவிட்டார்.
எத்தனை முறை நீதிமன்றத்தில் அவமானப்பட்டாலும் திமுக மீண்டும் மீண்டும் இந்துக்கள் பண்டிகைக்கு தடை போடுவதை மட்டுமே செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் காணாமல் போய் விடுகிறது …இதுதான் இவர்களின் சமூக நீதி காக்கும் லட்சணம் என்று பட்டியலின மக்கள் இயக்கங்கள் விமர்சனம் செய்கின்றனர்..