தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் காலை கடனை கழிக்க மாணவிகள் காட்டுப்பகுதிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் அரசு சார்பில் ஆதிதிராவிட மாணவியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவியர் தங்கியுள்ள விடுதியில் கழிப்பிட வசதிகள் கூட சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்ணீர் இல்லாததால் அருகில் உள்ள விவசாயப் நிலப்பகுதி மற்றும் ஓடைகள் போன்ற மிகவும் ஆபத்தான இடங்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் மாணவிகள் சென்றுவரும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் குடிநீர் வசதி, குளிப்பதற்கான தண்ணீர் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய கிணற்று பகுதிகளில் இருந்து மாணவிகள் பக்கெட்டுகளில் தண்ணீர் பிடித்து சாலையை கடந்து விடுதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விடியாத திமுக அரசின் அவலநிலையை கண்டு மாணவிகள் விடுதி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த விடுதி காப்பாளர் சித்ரா, மற்றும் போலீசார் மாணவிகளிடம் போராட்டத்தை கைவிடும்படியும், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினர். மாணவிகளின் நிலையை உணர்ந்த அருகாமையில் உள்ள பொதுமக்களும் அதிகாரிகளிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர். பெண் பிள்ளைகள் படித்து வரும் விடுதியில் கழிவறை வசதிக்கு தேவையான தண்ணீர்கூட வழங்க முடியாத நிலையில்தான் விடியாத அரசின் அவலம் நிலை உள்ளது.
உடனடியாக மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் விடியாத அரசின் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
யார் கேட்டா உங்களிடம் மகளிர் உரிமைத் தொகை ? முதலில் மாணவிகளை மரியாதையோடு நடத்துங்கள். மோடி அரசு எத்தனையோ நலத்திட்டங்களை அவர்களுக்கு செய்கிறது. விடிய அரசு ஏன் செய்வதில்லை, என்று கேள்வி எழுப்பினர் அக்கம் பக்கத்து பொதுமக்கள்!