விடியாத திமுக அரசின் அமைச்சர் வேலுவின் வீடு, ரியல் எஸ்டேட் நிறுவனம், அரசு ஒப்பந்தகாரர்கள் வீடு மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விடியாத திமுக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவர் அமைச்சரான பின்னர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம் வேப்பேரியில் பல்வேறு இடங்களிலும், திருவண்ணாமலை அருணை கல்லூரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை (நவம்பர் 3) முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தின் பிற மாவட்டங்களான கரூர், கோவையிலும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. கோவை ராமநாதபுரம் பர்சன் குடியிருப்பில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலர் மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடக்கிறது. இது போல் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் சோதனை நடக்கிறது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஷெபீல்டு டவர் என்ற நிறுவனத்திலும், சவுரிபாளையம் அருகே காசாகிரான்ட் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம்நாத் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை முடிவில்தான் எவ்வளவு பணம் கொள்ளை அடித்து வைக்கிறார் என்பது தெரியவரும்.
கடந்த ஏப்ரல் மாதம், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த தி.மு.க-வினர் தொடர்புடைய சொத்துப் பட்டியலிலும், எ.வ.வேலுவின் சொத்து மதிப்பு ரூபாய் 5,552.39 கோடி என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஶ்ரீநிவாசனிடம் கேள்வி கேட்டபோது, இந்தியாவிற்கு தெரியாது என்பதால், ஐ டி துறை அவருக்கு இந்தியாவை காட்டுகிறது என்று நக்கலாக பதில் சொன்னார்.