பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அவர்களின் 96-வது பிறந்த நாள் நேற்று (நவம்பர் 8) அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. அத்வானி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவரது வீட்டிற்கே நேரில் சென்று அவரை வணங்கி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று (நவம்பர் 8) பிரச்சார பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற பிரதமர் மோடி, நேரடியாக அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து, பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் அத்வானி இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.