ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சோலிங்கர் சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து படவேட்டம்மன் கோவிலை கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபட்டு வருகின்றனர். கோவிலுக்கு பக்தர்கள் வருகை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அறநிலையத்துறையினர் திடீரென கோவிலை முறையாக பராமரிக்கவில்லை எனக்கூறி, கோயிலிலும் உண்டியல் வைத்தனர். இதையறிந்த கிராம மக்கள், ஹிந்து முன்னணி தொண்டர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளின் செயலை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அப்போது, வெளியேறு, வெளியேறு அறநிலையத்துறையே வெளியேறு என்று கூறி அவர்கள் வைத்த அந்த உண்டியலை அகற்றினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுக அரசு ஏற்கனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு அக்கோவிலை சரியாக பராமரிக்காமல் உள்ளது. தற்போதைய நிலையில் பொதுமக்கள் பராமரித்து வரும் கோவிலையும் உண்டியல் வைத்து, அதன் மூலம்அபகரிக்க நினைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு முயற்சி இங்கு முறியடிக்கப்பட்டது. மக்கள் விழிப்போடு இருந்தால் இது சாத்தியம் என்கிறது இந்து முன்னணி இயக்கம்.