தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் 4-ம் கட்ட யாத்திரை (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம்) இன்று அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டத்தில் பிரமாண்டமாக தொடங்கியது.
கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் முதல்கட்ட யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதுவரை யாத்திரையின் மூன்று கட்ட யாத்திரை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்று ஜெயம்கொண்டத்தில் 4ம் கட்ட யாத்திரைப் பயணம் தொடங்கியுள்ளது. யாத்திரையின் போது மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை குறித்தும், திமுக அரசின் ஊழல், நிர்வாக சீர்கேடுகள் பற்றியும் விளக்கி வருகிறார். பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளையும் அதற்கான தீர்வுகளையும் செயல்படுத்தி வருகிறார். அண்ணாமலை செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் கடல் அலை போல் திரண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனவரியில் இந்த யாத்திரை முடியும் போது தமிழகத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்கின்றனர் தமிழக அரசியல் நிபுணர்கள்.